சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார்பைக்கில் சென்றவர், நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். புதுச்சேரி, குருவிநத்தத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 45; நெல்லிக்குப்பம், வெள்ளக்கேட்டை சேர்ந்தவர் குப்புசாமி, 58; கூலித் தொழிலாளிகள். இருவரும் கண்டரக்கோட்டை-கடலுார் கஸ்டம்ஸ் சாலை வழியாக ஆல்பேட்டை நோக்கி பைக்கில் வந்தனர்.பைக்கை சத்தியநாராயணன் ஓட்டினார். கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது, நாய் திடீரென குறுக்கே வந்ததால், சத்தியநாராயணன் பிரேக் பிடித்தார். இதனால், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த சத்தியநாராயணன் இறந்தார். குப்புசாமி கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X