சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேள்விக்குறி! கழிப்பறை வசதிகள் குறைவால் மாணவியர் சுகாதாரம்..குடிநீர், கட்டடங்கள் பராமரிப்பும் படுமோசம் ...மாவட்ட கல்வி அலுவலகம் இருந்தும் பயனில்லை

Added : பிப் 10, 2020
Advertisement

பொன்னேரி : பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமலும், குடிநீர் கட்டடங்கள் பராமரிப்பும் படுமோசமாக இருப்பதாலும், அதே வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் இருந்தும், அங்கு படிக்கும், 3,000 மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பொன்னேரி ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 3,000க்கும் அதிகமான மாணவியர் கல்வி கற்க்கின்றனர்.3,000 மாணவியர்பொன்னேரி மீஞ்சூர், அனுப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மாணவியர் இங்கு கல்வி பயில வருகின்றனர். மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதுமான கழிப்பறை வசதி கள் இங்கு இல்லை. 3,000 மாணவியர் படிக்கும் இப்பள்ளியில், இரண்டு இடங்களில், எட்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.ஒரு கழிப்பறை கட்டடத்தின் ஒரு பகுதியில், திறந்தவெளி கழிப்பிடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி, குடியிருப்புகள் அமைந்துள்ளதால், மாணவியர் ஒருவித சங்கடத்துடன் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.மற்றொரு கழிப்பறை சுகாதாரமற்று, கழிவுநீர் தேங்கியும், குப்பை கழிவுகளுடன் கிடக்கிறது.குப்பை எரிப்புகழிப்பறைகள் குறைவு மற்றும் சுகாதாரமற்று கிடப்பதால், மாணவியர் பெரும்பாலானவர்கள் மாலையில் வீட்டிற்கு சென்றே, உடல் உபாதைகளை கழிக்கின்றனர்.இதனால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களும் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கட்டடங்களை சுற்றிலும், புதர் மண்டியும், குப்பை கழிவுகள் தேங்கியும் உள்ளன.குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாத நிலையில், அங்கேயே வைத்து எரிக்கப்படுகிறது. பொன்னேரி சட்ட சபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வளாகமும் செயல்பாடு இன்றி கிடக்கிறது.


அதிருப்தி


பள்ளி மாணவர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கட்டடங்களை மாவட்ட கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது.மாவட்ட கல்வி அதிகாரிகள், தினமும் இந்த பள்ளி வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில், கழிப்பறை வசதி குறைவு, பராமரிப்பு இல்லாத கட்டடங்கள், தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள் குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மாணவியரின் எண்ணிக்கை ஏற்ப தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திடவும், பள்ளி வளாகத்தினை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மாணவியர் சுகாதாரம் பாதிப்புஅரசுகள் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அதிக மாணவியர்கள் இருக்கும் இந்த பள்ளியில் போதுமான கழிப்பறைகள் வசதிகள் இல்லாமல் அவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலகம் அருகில் இருந்தும், மாணவியரின் சுகாதாரம் பாதிக்கப்படுவதை ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

எம்.லட்சுமி வார்டு உறுப்பினர்,தடப்பெரும்பாக்கம் ஊராட்சி.மாணவியர் அச்சம் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுசூழல் பாதிக்கும் என, மாணவியருக்கு கற்பிக்கும் பள்ளி வளாகத்திலேயே, அவை எரிக்கப்படுகிறது. கட்டடங்களை சுற்றிலும் புதர்மண்டி மாணவியர் அச்சத்துடன் இருக்கின்றனர். குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள கழிப்பறை கட்டடத்திற்கு கூரை அமைக்கபடாமல் இருக்கிறது. மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

எப்.முகம்மது ஷகில், சமூக ஆர்வலர்,பொன்னேரிஆய்வுக்கு பின் நடவடிக்கைபள்ளி வளாகம் முழுவதையும் உடனடியாக ஆய்வு செய்து, தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திடவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியர் சிரமமின்றியும், சுகாதாரமாகவும் பள்ளி வந்து செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்தப்படும்.கே. ரவிமாவட்ட பொறுப்பு கல்வி அதிகாரி, பொன்னேரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X