பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,091 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 10, 2020
Advertisement

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2,091 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், ஆலந்துார் ஆகிய இடங்களில், நீதிமன்றங்கள் உள்ளன.சமரச தீர்வுஇங்கு, தேங்கி உள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை, சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது. செங்கல்பட்டில், மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா தலைமையில், மக்கள் நீதிமன்றம், நடந்தது.மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், இலவச சட்ட பணிகள் செயலர் உமாமகேஸ்வரி மற்றும் நீதிபதிகள் முன்னிலையில், வழக்குகளுக்கு, சமரச தீர்வு காணப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள, அனைத்து நீதிமன்றங்களில் உள்ள சிவில், வாகன விபத்து நஷ்டஈடு, இல்வாழ்க்கை, குற்றவியல் வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் என, 3,935 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டன.நிலுவை தொகைஇதில், மாவட்டத்தில் வங்கி வழக்குகளில், 278ல், 278 வழக்குகள் தீர்வு காணப்பட்டத்தில், 2.24 கோடி ரூபாயும், மாவட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, குற்றவியல் வழக்கு, சாலை விபத்து வழக்கு, சிவில், குடும்ப நல வழக்குகள் என, 3,657 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டன.இதில், 1,813 வழக்குகளுக்கு, 5.88 கோடி ரூபாய் தீர்வு காணப்பட்டது. மொத்த வழக்குகள், 3,935 வழக்கில், 2,091 வழக்குகளில், 8.13 கோடி ரூபாய், சமரச தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X