வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம்

Added : பிப் 10, 2020
Share
 வீரட்டானேஸ்வரர் கோவிலில்  அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, பவுர்ணமியை முன்னிட்டு, உற்சவர் அம்பாள், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து, பதினாரு கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:30 மணிக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், 11:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X