பொது செய்தி

தமிழ்நாடு

கண் கூசும் விளக்கு வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

ஆர்.கே.பேட்டை : நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளக்கின் ஒளியால், சாலையை சரியாக கவனிக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டையில் இருந்து, சோளிங்கர் செல்லும் சாலையில், ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஆர்.கே.பேட்டை காவல் நிலையம். அதன் எதிரே, பேரி கார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.விளக்கு வெளிச்சம் இன்றி, இரவு நேரத்தில் இருள் சூழந்திருந்த இந்த பகுதியில், சில நாட்களுக்கு முன், பிரமாண்டமான எல்.இ.டி., விளக்கு பொருத்தப்பட்டது.காவல் நிலையம் எதிரே உள்ள மரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த விளக்கு, எதிரே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு நேராக உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் சாலையை சரியாக கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வாகன ஓட்டிகளின் பார்வைக்கு நேராக இல்லாமல், உயர் கோபுரத்தில், மேலிருந்து கீழ் நோக்கி ஒளி வீசும் படியாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், தொழிற்பேட்டை என, முக்கிய முனையமாக அமைந்துள்ள இந்த பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு அமைத்தாலும், அது மக்களின் வரவேற்பை பெரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X