சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தீக்குளித்து தற்கொலை

Added : பிப் 10, 2020
Advertisement

மணவாள நகர் : மணவாள நகர் அருகே, உ.பி., மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம், சுவன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரதீப் மனைவி சவீதா, 28. இவர்களுக்கு, திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிறது.இவர்கள், இருவரும், மணவாள நகர் அடுத்த, போளிவாக்கம், சத்திரம் கிராமத்தில் வசித்து வருகிறார். பிரதீப்பிற்கு குடி பழக்கம் இருந்ததாகவும், அதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம், பிரதீப் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார்.

அப்போது, சவீதா, வீட்டில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டதில், பலத்த காயத்துடன் இருந்து உள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு இறந்தார். இதுகுறித்து, மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X