பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பகுதி கடைகளில் தொடர்கிறது பிளாஸ்டிக் பறிமுதல்

Added : பிப் 10, 2020
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகர் பகுதி யில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், நேற்று, மூன்று இடங்களில், 400 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன.காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நகர் பகுதியில், மொத்த வியாபாரிகள் சிலர் உள்ளனர். அவர்களிடம் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு வாங்கி செல்கின்றனர்.அந்த மொத்த வியாபாரிகள் கடைகளை கண்காணித்து பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அபராதமும் விதிக்கப்படுகிறது.

இருந்தும், அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதில், ராஜாஜி மார்க்கெட், பெரிய காஞ்சிபுரம் உட்பட மூன்று இடங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று சோதனை நடத்தினர்.அங்கிருந்து, 400 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கடை உரிமையாளர்கள் இனிமேல் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க கூடாது என, அறிவுறுத்தி, நோட்டீஸ் மற்றும் விற்பனை செய்ததற்காக அபராதம், 20 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X