சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல்: நால்வர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார்;சாலை நடுவே அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், ஏற்பட்ட கோஷ்டி மோதலில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் துறைமுகம், அக்கரைகோரியை சேர்ந்தவர்கள் பார்த்திபன், முருகன் மகன் சூர்யபிரகாஷ், 27; ராஜா மகன் மணிகண்டன், 27; திணேஷ். இவர்கள், அக்கரைகோரி முகத்துவாரம் அருகில் சாலை நடுவே அமர்ந்து மது அருந்தினர். அப்போது, அவ்வழியாக நடந்து வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் அருண்குமார், 23; இதை தட்டிக்கேட்டார்.இதில் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன் தரப்பினர் கத்தி, சுளுக்கியால் அருண்குமாரை குத்தினர். அதை தொடர்ந்து அருண்குமார் தரப்பினர் பார்த்திபன் தரப்பினரை தாக்கினர்.இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்தனர். இதில், சூர்யபிரகாஷ், மணிகண்டன், பழனி மகன் கிரி, 22; ரகுபதி மகன் பிரதீபன், 22; ஆகியோரை போலீசார் செய்து, பார்த்திபன், திணேஷ், அருண்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X