சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழங்கப்படாத 'சிடி'க்கு பணம் வசூல் பத்திரம் பதிவு செய்வோர் குற்றச்சாட்டு

Added : பிப் 10, 2020
Advertisement

புவனகிரி:பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பத்திர பதிவின் போது, பதிவு செய்யப்படும் 'சிடி' யை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நிலம், வீடு, மனைப்பதிவு போன்றவை விற்பனை செய்யப்படும் போது, விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்து சொத்துப்பத்திரம் வழங்கப்படும். இதில் முறைகேடுகள் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பத்திரப்பதிவின் போது, நடைபெறும் நிகழ்வுகளை, 'சிடி' யில் பதிவு செய்து, சொத்து வாங்குபவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக பத்திரப்பதிவு கட்டணத்துடன் ரூ.50 வசூலிக்கப்டுகிறது.
ஆனால், அரசின் ஆணைப்படி, இதுவரை யாருக்கும் 'சிடி' வழங்க வில்லை எனக் கூறப்படும் நிலையில், அதற்கான கட்டணம் இம்மாதம் முதல் தேதியில் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.வழங்காத 'சிடி'க்கு எதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என பயனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.மேலும், புவனகிரி பத்திர பதிவு அலுவலகத்தில், பதிவு செய்த பத்திரம் உரிய காலத்தில் வழங்காமல், அலைகழிக்க வைக்கப்படுவதாக பயனாளிகள் புலம்புகின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் பயனாளிகள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X