பொது செய்தி

இந்தியா

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (12)
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத் அருகே உலகின் மிக பெரிய தியான மையத்தை கடந்த ஜனவரி 28 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கன்ஹா சாந்திவனம் என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தியான மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மையத்தின் வழிகாட்டியாக இருந்து வரும் கமலேஷ் டி படேல் கூறியதாவது : ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 ஏக்கரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தியான பயிற்சி பெற முடியும்.

ஹார்ட்புல்னஸ் தியான இயக்கம் சார்பில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தியான பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்க சமையலறை உள்ளது, இவை அனைத்தும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீராவியில் சமைக்கப்படுகின்றன.

மழை சேகரிப்பு வசதிஆசிரமம் போதுமான மழைப்பொழிவு இல்லாத தரிசு நிலத்தில் அமைந்திருப்பதால், நீரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏழு செயற்கை குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரம மேற்கூரைகள் மழை நீர் சேகரிப்பு குழாய் இணைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் பெரும்பகுதியில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.

ஆசிரம வளாகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 180 மாணவர்களைக் கொண்ட பள்ளி செயல்பட்டு வருகிறது. ஹார்ட்ஃபுல்னெஸ் கற்றல் மையம் என்று அழைக்கப்படும் இந்த பள்ளி 5,000 மாணவர்களுக்கான வசதியாக விரிவாக்கப்பட்டு வருகிறது என்று ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் 502 படுக்கைகள் கொண்ட ஆரோக்கிய மையமும் வளாகத்தில் வருகின்றன.


இந்த அமைப்பு பல அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைத் தவிர, தேசிய போலீஸ் அகாடமி, மாநில காவல் துறைகள் மற்றும் மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளான பி.எஸ்.எஃப், சி.ஐ.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு தியானத்தை கற்பிப்பதன் மூலம் அவர்களின் உள் வலிமையில் கவனம் செலுத்த நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்,என தியான மையத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-பிப்-202016:03:32 IST Report Abuse
தமிழர்நீதி 400 ஏக்கர் இந்திய நிலம் , தியானத்திற்கு . வடக்கின் வியாதி, தெற்கிற்கு பரவுகிறது . நாட்டின் பிஜேபி முதல்வர்கள் , பிரதமர் , முதல்குடிமகன் எங்காவது மருத்துவமனை , உழவர் சந்தை, கல்லூரி , பள்ளிக்கூடம் , ஆராய்ச்சி மையம், தொழிற்சாலை , நெடும்சாலை , விவசாய கிடங்குகள் திறந்து வைத்ததாக எந்த செய்தியும் வருவதில்லை . இதுபோல , குந்தி தூங்கும் மடம்கள், பசு மருத்துவமனை , யானை புத்துணர்ச்சி மையம் திறப்பதாகத்தான் அறியவருகிறது ஊடகம் மூலம் . வெங்கயாம் விலை இமயம் தொடுது. 180 கோடி ஏக்கர் இந்தியாவின் நிலம் மக்களுக்கு வெங்காயமோ, உணவும் தர மறுக்குது , பிஜேபி 2 ஏக்கர் ராமர் ஜென்மபூமியிலும் , இதுபோல 400 ஏக்கர் மடத்திலும் முடக்கி கிடக்குது . குந்திகிட்டு மூக்கினால் சுவாசித்து முனகினால், குனிந்து எழுந்து பாபா ராம்தேவ் சோப்பு போட்டால் இந்தியாவின் பொருளாதாரம் உச்சம் தொடும் அப்புறம் எதிரிகள் கண்ணை மூடிக்கொண்டால் ஓடிவிடுவார்கள் .
Rate this:
Share this comment
mei - கடற்கரை நகரம்,மயோட்
14-பிப்-202012:42:48 IST Report Abuse
meiமசூதி கட்டினா நீ சந்தோச படுவாயோ?...
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
10-பிப்-202014:43:09 IST Report Abuse
Sundar Highly appreciable.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
10-பிப்-202011:47:32 IST Report Abuse
ganapati sb தமிழகத்தில் ராமச்சந்திர மிஷன் என்ற பெயரில் இந்த அமைப்பு உள்ள சென்னை கோவை திருப்பூர் த்யான மையங்களுக்கு சென்றுள்ளேன் இப்போதைய ஜனாதிபதி கோவிந்த் அவர்கள் இந்த ஆன்மிக அமைப்பில் த்யான பயிற்சி பெற்றவராம் உலகின் மிகப்பெரிய த்யான மையம் உலக மக்களுக்கு அமைதி அளிக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X