மர்ம நோயால் கறவை மாடுகள் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம நோயால் கறவை மாடுகள் பாதிப்பு

Added : பிப் 10, 2020
Share

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம் முழுவதும், விவசாயத்திற்கு அடுத்த படியாக, ஆடு, மாடு வளர்ப்பு பிரதான தொழிலாக இருக்கிறது. மழைக்காலம் மற்றும் பனி காலங்களில், ஆடு, மாடுகளுக்கு நோய் வரும். சிகிச்சைக்கு பின், சரியாகிவிடும்.

சமீபத்தில், கொட்டவாக்கம் ஊராட்சி மூலபட்டு கிராமம். புள்ளலுார் ஊராட்சி, அரங்கநாதபுரம் கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களில், மாடுகளுக்கு மர்ம காய்ச்சல் நோயால், கறவை மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்து இருப்பதாக மாடு வளர்ப்போர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கறவை மாடு வளர்க்கும் கே. பார்த்தசாரதி கூறியதாவது:கறவை மாடுகளுக்கு, கழுத்து மற்றும் பால் மடி அருகே, புண்ணாகிறது. கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தடுப்பூசி போட்டும் மாடுகளின் நோய் தீர்ந்தபாடு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X