பொது செய்தி

தமிழ்நாடு

ராமதாஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 ராமதாஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த பெரியவடவாடி மருத்துவர் ராமதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
கல்லுாரி தாளாளர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். முதல்வர் மதிவாணன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு கட்டுபாட்டாளர் முனைவர் செந்தில்குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, சிறப்புரையாற்றினார்.கல்லுாரி நிர்வாகி செந்தில்குமார், திருவண்ணாமலை அரசு கல்லுாரி பேராசிரியர் அயோத்தி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரி பேராசிரியர் சுந்தரசெல்வன், ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்தழகன், துறை தலைவர்கள் வடிவேல் முருகன், மணிகண்டன், கர்ணன், சத்ருகன், அன்பழகன், சாந்தி, கனிமொழி, ஈஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், 2014 முதல் 2019 ம் கல்வி ஆண்டு முடிய, இளங்கலை, முதுகலை படித்த 677 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X