மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம்

Added : பிப் 10, 2020
Share
கம்மாபுரம்;கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'ஸ்மார்ட் கார்டு' விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாமை, ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகரன் துவக்கி வைத்தார்.மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் பெறும் வகையில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. அதன்படி,
 மாற்றுத்திறனாளிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம்

கம்மாபுரம்;கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'ஸ்மார்ட் கார்டு' விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாமை, ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகரன் துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் பெறும் வகையில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.கம்மாபுரம் ஒன்றிய 43 ஊராட்சிகளில், 'ஸ்மார்ட் கார்டு' அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த முகாமை ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகரன் துவக்கி வைத்தார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., தண்டபாணி, துணை பி.டி.ஓ.,க்கள் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், சிறப்பாசிரியர்கள் ராஜேஸ்வரி, சோனியா, மாற்றுத்திறனாளி நலச்சங்க தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.இம்முகாமில், ஏற்கனவே ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் தவிர விண்ணப்பிக்காமல் விடுபட்ட, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் விண்ணப்பம் பெறப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை தெளிவாக நகல் எடுத்து, புதிய பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டப்பட்ட வெள்ளைத்தாளில், தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, கையொப்பம் அல்லது கைரேகை யுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X