தமிழ்நாடு

பரிசீலனை:கல் குவாரிகளை மீண்டும் ஏலத்தில் விட வருவாய் இழப்பை தவிர்க்க நடவடிக்கை

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
பரிசீலனை:கல் குவாரிகளை மீண்டும் ஏலத்தில் விட  வருவாய் இழப்பை தவிர்க்க நடவடிக்கை

மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க கல் குவாரிகளை மீண்டும் ஏலம் விட கனிம வளத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் முறைகேடு புகார்களையடுத்து கிரானைட் குவாரிகள் செயல்பட 2012 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் கட்டுமான பணிகளுக்காக கல் குவாரிகள் மட்டும் ஏலம் விடப்படுகின்றன. கடந்தாண்டு மேலுார், வாடிப்பட்டி தாலுக்காக்களிலுள்ள 41 கல்
குவாரிகள் ஏலம் விடப்பட்டன. ஆனால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஏலத்தொகை அதிகம் இருப்பதாக கூறி ஏலம் எடுக்க ஒப்பந்தாரர்கள் மறுத்து விட்டனர்.

இரு குவாரிகளை தவிர மற்றவை ஏலம் போகவில்லை. இதுகுறித்து கனிமவளத்துறை
அதிகாரிகள் கலெக்டர் வினய் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் கல் குவாரிகள் ஏலம் போகாததால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க குறைந்த பட்ச தொகையை அரசு ஒப்புதல் பெற்று மறுநிர்ணயம் செய்து ஏலம் போகாத
குவாரிகளை மீண்டும் ஏலத்தில் விடுவது குறித்து கனிமவளத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர். அரசு ஒப்புதல் வழங்கியதும் கல் குவாரிகள் பொது ஏலம் விடப்படும் என
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நான் மதவாதி இல்லை. ஆன்மீகத்தை நம்புபவன்,ஆன்மீகத்தை மதிக்கும் இந்து விலை போகவில்லை எனில் என்றும் கெட்டுபோகாத பொருள் / வளம் அரசிடமே உள்ளது... இதன் மூலம் வரும் மூலப்பொருளுக்கு மதிப்பு வரும் வரை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை... விலை குறைப்பதால் அரசிற்குத்தான் நஷ்டம் கனிம வளம் வீணாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X