பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த மின்னழுத்தம் பிரச்னை துணைமின்நிலையம் தேவை

Added : பிப் 10, 2020
Advertisement

கம்மாபுரம்;வி.குமாரமங்கலம் துணை மின் நிலையம் அமைக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டுமான பணியை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் ஊராட்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மூலம், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.அதற்காக அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு போர்டு வைக்கப்பட்டது. கட்டுமான பணிக்காக போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, நெல், கரும்பு பயிரிட்டுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதன் காரணமாக விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, வி.குமாரமங்கலம் துணை மின்நிலையம் அமைக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டுமான பணியை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X