பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லூரி செய்திகள்

Added : பிப் 10, 2020
Advertisement

பட்டமளிப்பு விழா

மதுரை லேடி டோக் கல்லுாரியில் 54வது பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வர் கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் நிர்மலா ரெபேக்கா வரவேற்றார். கொடைக்கானல் தெரசா பெண்கள் பல்கலை துணைவேந்தர் வைதேகி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். 1389 பேர் பட்டம் பெற்றனர். மாணவ பேரவை முன்னாள் தலைவர் கார்மல் ப்ரெனில்லா துறை பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.

கலை விழா

மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் 'காமார்ஸ் 2020' என்ற தலைப்பில் கலை விழா முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. துறைத் தலைவர்கள் மார்ட்டின் டேவிட், மேரி ஷோபியா சித்ரா, ஜஸ்டின் மனோகர், சாமுவேல் அன்புச்செல்வன், கனகவள்ளி, ஹிலாரி ஜோசப், அந்தோணி மேரி மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

விளையாட்டு விழா

மதுரை ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளியில் குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கும் விழா மன்றத் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது. கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஷாஜஹான், கூடுதல் அலுவலர் ஜோஸ்பின் ரூபி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். நன்கொடையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியைகள் ஷகிலாமாய், பானு, உமாராணி, ராஜேஸ்வரி ஏற்பாடு செய்தனர். தலைமை ஆசிரியை ஜீவா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X