பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement
 பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு

கிள்ளை;விடுமுறை நாள் என்பதால் நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளது. இதனால், சுற்றுலா மையத்திற்கு தினமும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தது. ஒரே நேரத்தில், அனைவரும் படகு சவாரி செல்ல முடியாததால், சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். படகு சவாரி செல்ல முடியாதவர்கள், சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி வனக்காடுகளை கண்டுக்களித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X