தமிழ்நாடு

கூடுதல்! டாஸ்மாக் கடை 'பார்' களின் எண்ணிக்கை...முழுவீச்சில் மீண்டும் மதுபாட்டில்கள் விற்பனை

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 கூடுதல்!  டாஸ்மாக் கடை 'பார்' களின் எண்ணிக்கை...முழுவீச்சில் மீண்டும் மதுபாட்டில்கள் விற்பனை

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில், 'பார்'களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 200க்கும் மேலான அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. நாடு முழுவதும் மது விற்பனைக்கு, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.., வின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக் கடைகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அவற்றில் கடலுார் மாவட்டத்தில் இருந்து 15 கடைகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டன. இதனால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டமும் அதிகரித்தது. அதனால், டாஸ்மாக் கடைகளை அமைக்க முடியாமல் அரசு திண்டாடியது.
தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 142 கடைகள் இயங்கி வருகின்றன. அதேபோல், குடிப்பிரியர்கள் மது அருந்துவதற்கு வசதியாக 30 பார்கள் செயல்பட்டு வந்தன. பல இடங்களில் அரசின் அனுமதி பெறாமலேயே பார்கள் செயல்பட்டு வந்தன. அண்மையில் நடந்த டெண்டரில் மேலும் 17 பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மொத்தத்தில் 47 பார்கள் செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சி போராட்டங்கள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழக அரசு கடைகள் குறைப்பு, பொது மக்கள், பெண்கள் எதிர்ப்பு ஆகியவற்றையும் மீறி கடலுார் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202006:18:40 IST Report Abuse
ஆப்பு கடலூர் டாஸ்மாக்கிற்கு மிக முக்கியமான மாவட்டம். அங்கே மூடுனா, பாண்டிச்சேரி சரக்கு கடத்தி வரப்பட்டு ஆறாய் ஓடும். ஒக்கேவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X