பொது செய்தி

தமிழ்நாடு

குடோனாக மாறிய பயணியர் நிழற்குடை

Added : பிப் 10, 2020
Share
Advertisement

மங்கலம்பேட்டை;சின்னபண்டாரங்குப்பம் பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை அடுத்த சின்னபண்டாரங்குப்பத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், மாணவர்கள் விருத்தாசலம் - ஆலடி சாலைக்கு, தினசரி வந்து பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.இந்த சாலையில் கிராம மக்கள் நலன் கருதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டி திறக்கப்பட்டது. இந்த நிழற்குடை தற்போது கீற்று அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, கீற்று அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ள பயணியர் நிழற்குடையை, கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X