பொது செய்தி

இந்தியா

கோவில்களில் தைப்பூச விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 கோவில்களில் தைப்பூச விழா

திருக்கனுார்:திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில் 48ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது.
இதனையொட்டி, சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம், பக்தர்கள் வேல் அணிந்தும், டயர் வண்டி இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, தமிழகப்பகுதியான புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தைப்பூச விழா நடந்தது.நெட்டப்பாக்கம்கோண்டூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. அதனையொட்டி108 பால்குட ஊர்வலம், சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நல்லாத்துார்சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு 15ம் ஆண்டு தை பூச விழாவைமயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் துவக்கி வைத்தார். காலை 11.00 மணிக்கு மகாதீபம்ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.கூடப்பாக்கம் நமிலீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு காலையில் முருகப் பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், செடல் போட்டும், வேல்காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுப்பரமணியசுவாமி வீதியுலா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X