தென்னையில் நோய் தாக்கு:வேதனையில்விவசாயிகள்

Added : பிப் 10, 2020
Advertisement
 தென்னையில் நோய் தாக்கு:வேதனையில்விவசாயிகள்

கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி பகுதியில் தென்னை மரங்கள் வெள்ளை நிற பூச்சி தாக்குதல் ஏற்பட்டு கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இப்பகுதியில் தென்னை விவசாயம் வாழ்வாதாரமாக உள்ளது. சின்ன கொட்டாம்பட்டியில் இரவு காற்று வீசும் திசையில் வெள்ளை நிற பூச்சிகள் பறந்து தென்னை மரங்களுக்கு செல்கின்றன. இலை அடியில் 10 நாட்கள் தங்கி சத்துக்களை உறிஞ்சும் பூச்சிகள் 45 நாட்கள் கூடு கட்டி முட்டையிட்டு பூச்சிகளை இனப்பெருக்கம் செய்கின்றன. முருகன், நல்லதம்பி, சண்முகம், பிச்சை உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளின் தென்னை மரங்கள் கருகி சாய்ந்துள்ளன.

விவசாயி முருகன் கூறியதாவது: பத்து மாதங்களுக்கு முன் மூன்று மரங்களில் நோய் தாக்குதல் ஏற்பட வேளாண் வழிகாட்டி சுப்பிரமணியிடம் புகார் தெரிவித்தேன். முறையான வழிகாட்டுதல் இல்லை. ஆயிரம் மரங்கள் வரை இந்த நோய் தாக்குதலால் இலை, பாலை, குரும்பை, இளநீர், மட்டைகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன என்றார்.

வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: இலை அடியில் தங்கியுள்ள பூச்சிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்தால் மட்டுமே நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X