பொது செய்தி

இந்தியா

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி:புதுச்சேரி கலை விளையாட்டு சங்கமம்-2020 என்ற தலைப்பில் நடந்த விளையாட்டு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரி கலை விளையாட்டு சங்கமம்-2020 என்ற தலைப்பில் விளையாட்டு போட்டிகள் கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காரைக்காலில் தொடங்கி நடைபெற்றது.தொடர்ந்து கடந்த 4-ம் தேதி முதல் 8 ம் தேதி வரை புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.இதில் நீளம் தாண்டுதல், ஓட்டபந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கல்லூரிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன் பரிசளிப்பு விழா மற்றும் மாணவ- மாணவிகளின் கலைப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது.உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்த விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் கமலக்கண்ணன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., வளர்ச்சி ஆணையர் அன்பரசு, உயர் கல்வித்துறை இயக்குநர் யாசிம் லட்சுமிநாராயண ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X