சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்மதுரை

Added : பிப் 10, 2020
Advertisement

ரூ.30.63 லட்சம் அபராதம் வசூலிப்பு

மதுரை: போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்உத்தரவின்படி 2019 ல் போக்குவரத்து விதிகள் மீறியதாக 8429 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.30 லட்சத்து 63 ஆயிரத்து 900 அபராதம் வசூலித்து கருவூலத்தில் வரவு வைக்கப்பட்டது.

காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு மிரட்டல்

மதுரை: சதாசிவநகர் தனியார் கல்லுாரி பேராசிரியை மின்மினி 25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் விக்கி (எ) விக்னேஷ்வரன். இவருக்கு மின்மினி மீது ஒரு தலை காதல் ஏற்பட்டது. திருமணம் முடிக்க அழைத்தார்.மறுத்ததால் அலைபேசியில் குறுந்தகவல்கள் அனுப்பினார். மேலும் மின்மினி போட்டோக்களை சமூக தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

மதுரை: ஆரப்பாளையம் திவ்யா 21. இவருக்கும் விழுப்புரம் அரசு மருத்துவமனை ஊழியர் செல்லத்துரைக்கும் 28, கடந்தாண்டு திருமணம் நடந்தது. 45 பவுன், ரூ.5 லட்சம், சீர்வரிசையை பெண் வீட்டார் வழங்கினர். கூடுதல் வரதட்சணை கேட்டு திவ்யா சித்ரவதைக்கு உள்ளானார். அவரது புகார்படி செல்லதுரை, தந்தை முருகன், தாயார் ஜெயக்கொடி, சகோதரர் தங்கதுரை, அவரது மனைவி பாண்டிசெல்வி, சகோதரர்மொக்கைதுரை மீது தெற்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்தில் வாலிபர் பலி

அலங்காநல்லுார்: மிளகரனை ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ் 18, மோல்டிங் தொழிலாளியாக வேலை செய்தார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) உறவினர் அன்பரசனுடன் 15, மதுரை சென்று திரும்பினார். சிக்கந்தர் சாவடி அருகே பின்னால் சென்ற மினிலாரி டூவீலரில் மோதியதில் இறந்தார். காயமுற்ற அன்பரசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலத்தில் தவறி விழுந்தவர் பலி

சோழவந்தான்: திருவேடகம் ரோடு ஆர்.எம்.எஸ்., காலனி வரை சமீபத்தில் போடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 4 இடங்களில் பொதுபணித்துறை சார்பில் ரோடு குறுக்கே கால்வாய் பாலம் கட்ட துவங்கினர். தடுப்பு மற்றும் இரவில் வெளிச்சம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இன்றி சிறு விபத்துகள் தொடர்ந்து நடந்தன. திருமால்நத்தம் மெக்கானிக் விஸ்வநாதன்25, மதுரையில் இருந்து நேற்று அதிகாலை டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சோழவந்தான் சென்ற போது பணி முடியாத பாலத்தின் நடுவே தவறி விழுந்து இறந்தார்.

வேகத்தடையில் தவறி விழுந்த பெண் பலி

திருமங்கலம்: வாகைகுளம் முருகேசன். இவரது மனைவி தனலட்சுமி 46. இவர்களுடைய மகன் அருண்குமாருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருண்குமார் தாயார் தனலட்சுமியை டூவீலரில் அழைத்து சென்றார். உசிலம்பட்டி ரோடு பிரிவு நான்குவழிச்சாலை அண்டர்பாஸ் பாலம் கீழ் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலைதடுமாறி தனலட்சுமி பின்புறமாக விழுந்ததில் தலையில் காயமடைந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். டவுண் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேன் கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை உயர்வு

திருமங்கலம்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நேசநேரி பிரிவில் அரியானா மாநில சுற்றுலா வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். பத்து பேர் காயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமுற்ற ரத்னா தேவி 48, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X