பொது செய்தி

இந்தியா

சுப்ரமணியபாரதி பள்ளி ஆண்டுவிழா

Added : பிப் 10, 2020
Advertisement
 சுப்ரமணியபாரதி பள்ளி ஆண்டுவிழா

புதுச்சேரி;திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியின் 29ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு காங்., பிரமுகர் துரைராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் சேர்மன் ஹரீஸ்குமார், மோகன்குமார், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஷஹாபுதீன், முகமது இப்ராஹிம், ரத்தினசந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சம்பத் வரவேற்றார். பள்ளியின் ஆண்டறிக்கை மற்றும் மாணவ-மாணவிகளின் சாதனைகள் காணொளி காட்சி மூலம் ஒலிபரப்பப்பட்டது.செல்வம் எம்.எல்.ஏ., பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வித்துறை முன்னாள் இணை இயக்குனர் கிருஷ்ணராஜி பரிசு வழங்கினார். வட்டார காங்., தலைவர் கண்ணன், அ.தி.மு.க., பிரமுகர் நாசர், சையத்அகமது, செல்வக்குமார், பூமிநாதன், வைரக்கண்ணு, சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துளசி, பொதுச்செயலர் ரங்கநாதன், பொருளாளர் சிவசுப்ரமணி, திருபுவனை கலைமகள் ஆங்கில உயர்நிலைப் பள்ளி நிர்வாகி முருகையன் வாழ்த்துரை வழங்கினர்.பொதுத் தேர்வுகளில் கிராமப்புற பள்ளிகளில் மாநில அளவில் சாதனை மற்றும் தொடர்ந்து 14வது ஆண்டாக 'சிறந்த பள்ளிக்கான முதலமைச்சர் விருது' பெற்ற பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசீலாசம்பத் ஆகியோருக்கு செல்வம் எம்.எல்.ஏ., மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பள்ளி துணை முதல்வர் சுசீலாசம்பத் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X