பொது செய்தி

இந்தியா

ஜிப்மர் மருத்துவமனையில் கலந்துரையாடல்

Added : பிப் 10, 2020
Advertisement
 ஜிப்மர் மருத்துவமனையில் கலந்துரையாடல்

புதுச்சேரி;வலிப்பு நோய் அனைத்து வயதினரையும் பொதுவாக பாதிக்கக் கூடிய நோயாக உள்ளது என ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசினார்.
சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஜிப்மர் நரம்பியல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கலந்துரையாடல் உள்படபல்வேறு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மருத்துவ மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடந்தது.ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் நடந்த கருத்தரங்கிற்கு நரம்பியல் துறை பேராசிரியர் பிரதீப் நாயர் வரவேற்றார்.கருத்தரங்கை துவக்கி வைத்த ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசியதாவது: வலிப்பு நோய் என்பது மூளையை சார்ந்த ஒரு நீண்டகால தொற்றாத நோய். இருப்பினும் பாதிக்கப்பட்டவருக்குஅடிக்கடி நொடிப்பை ஏற்படுத்தும்.இது அனைத்து வயதினரையும் பொதுவாக பாதிக்கக் கூடியது. உலகளவில் வலிப்பு நோய் என்பது மிகவும் பொதுவான நரம்பியல் நோயாகும். 65 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது 100 நபர்களில் 1 என்ற கணக்கில் உள்ளது, வலிப்பு நோய்க்கு சரியான சிகிச்சை தர இயலாத வருமான குறைந்த நாடுகளில் மிகவும் மோசமாக. 70 விழுக்காடு மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 வலிப்பு நோயாளிகளில் 6 பேருக்கு இது ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை, மீதமுள்ளவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்பட காரணம் பிறப்பின் போதே மூளையில் உள்ள கோளாறு. சாலை விபத்துக்கள்,நியூரோசிஸ்டிசெரோசிஸ்,காசநோய்,பக்கவாதம் போன்ற நோய்த்தாக்கம்,மூளைக் கட்டிகளால் ஏற்படும் மூளை பாதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஜிப்மர் டீன் பங்கஜ் குன்ந்ரா, பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, சுனில் நாராயண், வைபவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் வலிப்பு நோய் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X