ரேஷன் கடை இருக்கு ஆனால் இல்லை

Added : பிப் 10, 2020
Advertisement

பேரையூர்:பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியம் எம்.சுப்புலாபுரம் அருகே சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. ரேஷன் கடை உள்ளது. ஆனால் திறப்பு விழா காணாததால் கடை செயல்படவில்லை.

அருகில் உள்ள சுப்புலாபுரத்திற்கு 3 கி.மீ. நடந்து சென்று சமத்துவபுரம் மக்கள் ரேஷன் பொருட்கள்வாங்க வேண்டியுள்ளது. பஸ் வசதியும் இல்லை. தெரு விளக்குகள் பழுதானதால் இரவு எரிவதில்லை.சமத்துவபுரம் சவலைபுரமாக மாறி விட்டது. போதிய வசதிகள் இல்லாத தால் 100 வீடுகள் இருந்த சமத்துவபுரத்தில் 20 குடும்பத்தினர் மட்டும் வசித்து வருகின்றனர். ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் 80 வீடுகள் வீணாகி வருகின்றன.

குடியிருப்போர் கூறியதாவது: வசதிகள் இல்லாததால் குடியிருப்போர் குறைந்து விட்டனர். இங்குள்ள ரேஷன் கடை திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X