இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் | Dinamalar

இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம்

Added : பிப் 10, 2020
Share
 இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம்

வில்லியனுார்:வில்லியனுார் தொகுதி இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மத்திய அரசின் தவறுதலான நிர்வாகத்தினால், நாட்டில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வில்லியனுாரில் தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு இளைஞர் காங்., தொகுதி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி உதயகுமார் முன்னிலை வகித்தார். தொகுதி செயலர் பிரபு வரவேற்றார். இளைஞர் காங்., மாநில தலைவர் ரமேஷ், மத்திய அரசின் வேலையின்மையை தெரியப்படுத்த 8151994411 என்ற செல்போன் எண் அறிமுகப்படுத்திபேசினார்.நிகழ்ச்சியில் தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X