இந்தியா

துவக்கம்! சுற்றுலாத்துறை சார்பில் இலவச யோகா பயிற்சி....கடற்கரைசாலையில் ஞாயிறுதோறும் நடைபெறுகிறது

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020
Advertisement
 துவக்கம்! சுற்றுலாத்துறை சார்பில் இலவச யோகா பயிற்சி....கடற்கரைசாலையில் ஞாயிறுதோறும் நடைபெறுகிறது

புதுச்சேரி;புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைச்சாலையில், பொதுமக்களுக்கான, வாரந்தோறும் ஞாயிற்று கிழமை நடைபெறும் இலவச யோகா பயிற்சி நேற்று துவங்கியது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், பெரும்பாலானவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாததால், உடல் பருமன் அதிகரித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். மருத்துவ முறைகள் நோய் வந்த பின்பே, அவற்றில் இருந்து விடுபட வழி செய்கிறது. ஆனால், யோகா நோய் வராமல் காப்பதற்கானவழிமுறையை கொண்டது. ஒழுக்கத்துடன், நல்ல மனிதனாக வாழ்வதற்கான பக்குவத்தையும்அளிக்கிறது. யோகா என்பது உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து யோகா செய்வதை வழக்கமாகி கொண்டுள்ளனர். புதுச்சேரி கடற்கரையில் தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டது.
இதைத் தொடர்ந்து, தலைமை செயலர் மற்றும் துறை செயலர் உத்தரவுப்படி புதுச்சேரி கடற்கரைச்சாலை காந்தி திடலில், வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் நடத்தப்படும் இலவச யோகா பயிற்சி நேற்று துவங்கியது. காலை 6:30 மணிக்கு துவங்கிய இலவச யோகா பயிற்சியில், ஏராளமானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த இலவச யோகா பயிற்சி வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 மணி முதல் காலை 7:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை மற்றும் லேகபே ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X