கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை| Dinamalar

கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

வில்லியனுார்:கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். கூலி வேலை செய்துவருகிறார். இவரது மகள் குணவதி,19; மதகடிப்பட்டில் உள்ள அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 7ம் தேதி குணவதியை வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர், வெளியூர் கோவிலுக்கு சென்றனர். மறுநாள் வீட்டிற்கு வந்தபோது, குணவதியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான கல்லுாரி மாணவி குணவதியை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X