பொது செய்தி

இந்தியா

மாஜி ராணுவ வீரர்கள் லீக்: 14வது ஆண்டு விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 மாஜி ராணுவ வீரர்கள் லீக்: 14வது  ஆண்டு விழா

புதுச்சேரி;புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் 14வது ஆண்டு விழா, அரியாங்குப்பம் காமராஜர் மண்டபத்தில் நடந்தது.லீக் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் ஜோதிகுமார் வரவேற்றார்.ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., லீக் உறுப்பினர் பிள்ளைகள் 15 பேருக்கு தலா ரூ.2,000ஊக்கத்தொகை வழங்கினார். வீர தாய்மார்கள், இரண்டாம் உலகப்போர் வீரர்கள் 10 பேருக்கு தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர்களாக இருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் மத்திய கவுன்சில் உறுப்பினர் நடராஜன், தமிழ்நாடு லீக் பொது செயலர் ராஜகோபால், புதுச்சேரி லீக் மூத்த உறுப்பினர் வினீந்திரன், விமானப்படை முன்னாள் வீரர் ராமசுப்ரமணிய ராஜா, பொதுச் செயலர் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வீரமணி நன்றிகூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X