சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்

Added : பிப் 10, 2020
Advertisement

புதுச்சேரி;கட்டுமான பணியின்போது, சிமென்ட் மூட்டை விழுந்ததில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்..
முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகர், 8 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 23. இவரது மனைவி ஜெயப்பிரியா,22. இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.பாலாஜி ஜிப்மர் வளாகத்தில் நடக்கும் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 9ம் தேதி, மாலை 4:00 மணிக்கு ஒயிட் சிமென்ட் மூட்டையை துாக்கிக் கொண்டு படிக்கட்டில் ஏறியபோது, நிலை தடுமாறி விழுந்தார். அவர் கழுத்தில் சிமென்ட் மூட்டை விழுந்தது.அதில் படுகாயமடைந்த பாலாஜி., உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனை மற்றும் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை, பாலாஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பாலாஜியை காந்தி வீதியில் உள்ள மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X