குடும்ப பிரச்னையில் லாரி டிரைவர் தற்கொலை

Added : பிப் 10, 2020
Advertisement

புதுச்சேரி;குடும்ப பிரச்னை காரணமாக லாரி டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நைனார்மண்டபம், பிரியதர்ஷினி நகர், நெய்தல் வீதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார், 31. லாரி டிரைவர். இவரது மனைவி உஷா, 23. திருமணமாகி 16 மாதங்களாகும் இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. உஷா குழந்தை பிறந்ததால், , குமந்தான்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார். விஜயக்குமார், வார இறுதி நாட்களில் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு வந்துள்ளார்.தனிக்குடித்தனம் செல்ல, வீட்டின் மேல்பகுதியில் வீடு கட்டி வந்தார். இதனால், அவரது தாய் சரோஜா மற்றும் சகோதரரிடமும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி உஷாவுக்கு போன் செய்த, விஜயக்குமார், மனசு சரியில்லை. தைப்பூசத்திற்கு முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிய நிலையல், அன்று இரவு 11:00 மணிக்கு, கடலுார் சாலை மால் எதிரில் உள்ள மரத்தில், விஜயக்குமார் துாக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று, விஜயக்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X