பொது செய்தி

தமிழ்நாடு

காவலுக்கு கெட்டிக்காரன்... வீரமான வேட்டைக்காரன்... கண்காட்சியில் மிரட்டிய ராம்நாடு 'மந்தை'

Added : பிப் 10, 2020
Advertisement

மதுரை:'காவலுக்கு கெட்டிக்காரன்... வீரமான வேட்டைக்காரன்...' என, செல்லமாக
அழைக்கப்படும் ராமநாதபுரம் நாட்டு நாய் 'மந்தை' மதுரை கெனைன் கிளப் சார்பில் காந்தி
மியூசியத்தில் நடந்த கண்காட்சியில் தெறிவிக்க விட்டது.

இக்கிளப் 21 ஆண்டுகளாக அகில இந்திய நாய்கள் கண்காட்சியை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டு நாய்களை பங்கேற்க செய்து திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. நேற்று நடந்த கண்காட்சியில் பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த நாய் வளர்ப்போர் பங்கேற்று தங்கள் நாய்களை சாகசம் செய்ய வைத்து பரிசுகளை தட்டி சென்றனர்.

கிளப் தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது: கடந்தாண்டு நாட்டு நாய்கள் பிரிவில்
சிப்பிப்பாறை நாய்கள் சாகசம் நிகழ்த்தின. இந்தாண்டு ராமநாதபுரம் மந்தை, கோம்பை நாய்கள் அணிவகுத்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தன. இந்த நாய்கள் வயல்களில் வாலாட்டும் பூனை, காட்டு பன்றிகளை புலியாக பாய்ந்து வேட்டையாடும். மாடு, ஆட்டு மந்தைகளுக்கு தலைமையேற்று மேய்க்கும் திறமையும் பெற்றவை.

மந்தை உட்பட தேசிய அளவில் 220க்கும் மேற்பட்ட 30 வகையான நாய்கள் சாகசம் நிகழ்த்தின. சிப்பிபாறை, கோம்பை, ஜாக் ரஷல் டிரையன், சியாவுகா, ரேவான் ஹவுண்ட், அமெரிக்கன் பீபுல், கிரேட் டேன், செயின்ட் பெர்னார்டு போன்ற நாய்கள் குஷியாக சுற்றி வந்தன.
சர்வதேச நடுவர்களான கொரியா ராபர்ட் டாசன், இந்தோனேஷியா ஜோனத்தன் மெஸ்சா சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் என்றார். கிளப் செயலாளர் ராமநாதன், நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X