பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவத்தினருக்கு இணையான சலுகை வழங்க வலியுறுத்தல்

Added : பிப் 10, 2020
Advertisement

மதுரை:'எல்லை பாதுகாப்புப்படை (பி.எஸ்.எப்.,) முன்னாள் வீரர்களுக்கு ராணுவத்திற்கு
இணையான சலுகை வழங்க வேண்டும்,' என, மதுரையில் பி.எஸ்.எப்., ஓய்வு டி.ஜி.பி.,
பொன்னுசாமி வலியுறுத்தினார்.

பி.எஸ்.எப்., முன்னாள் வீரர்கள் நல சங்க கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுந்தரம், பொதுச் செயலாளர் சண்முகராஜ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் டி.ஐ.ஜி., பொன்னுசாமி பேசியதாவது: எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு
ராணுவத்திற்கு இணையான சலுகை வழங்க சட்ட ரீதியாக அனுமதி வழங்கி மத்திய அரசு
உத்தரவிட்டு 48 ஆண்டுகள் கடந்து விட்டன. இதனால் முன்னாள் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலரிடம் வலியுறுத்தப்படும், என்றார்.

நிர்வாகிகள் சுந்தரராஜன், வேல்முருகன், பிரபாகர், பாஸ்கரன், எத்திராஜூலு, மோகன்,
கண்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X