தமிழ்நாடு

எப்போதுதிண்டுக்கல்மருத்துவக்கல்லூரி பணிகள் துவக்கம் முதல்வர் தேதிக்காக காத்திருக்கும் டாக்டர்கள்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லுாரி கட்டட பணிக்கான, அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பழனிசாமியின் தேதிக்காக காத்திருக்கிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 2,925 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லுாரிக்கு ரூ.325 கோடி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அடியனுாத்து கிராமம் ஒடுக்கத்தில் 8.61 எக்டர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளனர். அவ்விடத்தில் மண் மாதிரிகள் ஆய்வு செய்து பள்ளமான பகுதிகளில் சமன்படுத்தும்பணி, முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளது. கடந்த மாதமே அடிக்கல் நாட்டுதலுடன் கட்டுமான பணிகளை துவங்க திட்டமிட்டனர். ஆனால் முதல்வர் பழனிச்சாமியின் அனுமதி கிடைக்கவில்லை. அவரது தேதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அரசு டாக்டர்கள் கூறுகையில், ''மருத்துவக்கல்லுாரி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். அது தவறான தகவல். ஓரிரு வாரத்தில் முதல்வர் பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய மருத்துவக் கல்லுாரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்க உள்ளது. அதன்பின் கட்டுமான பணிகள் துவங்கும்'' என கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X