பொது செய்தி

தமிழ்நாடு

சினை ஆடுகளை விரட்டி பிடிக்கலாமா

Added : பிப் 10, 2020
Advertisement
 சினை ஆடுகளை விரட்டி பிடிக்கலாமா

திண்டுக்கல்:'சினை ஆடுகளை விரட்டி பிடித்தால் கருச்சிதைவு ஏற்படும்' என, திண்டுக்கல் கால்நடை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

அவர் கூறியது: சினை ஆடுகளை நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் மேய விடக்கூடாது. கருவுற்ற ஆடுகளை மேய்ச்சலுக்காக நீண்ட துாரம் நடத்தி செல்ல கூடாது. மேய்ச்சலின் போது அங்கும் இங்குமாக விரட்டி அடித்து மேய விடக்கூடாது. இதனால் கருச்சிதைவு ஏற்படும். ஆடு சினையாய் இருப்பது தெரிந்தால் நிழலில் மேய்ச்சலுக்கு விடலாம். சினைக் காலத்தை முன் பருவம், பின் பருவம் என பிரித்து கொண்டு அதற்கேற்ப பராமரிப்பு முறையை மேற்கொள்ளலாம்.

கருவுற்ற நாள் முதல் மாதம் மாதம் ஆடுகளின் எடை கூட வேண்டும். ஐந்து முதல் 6 கிலோ வரை எடை கூடும். மேய்ச்சல் மூலமாக ஆடுகளின் தீவன தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆடுகளின் சினைப்பருவ பின் காலத்தில் கடைசி 30 நாட்களுக்கு மேல் துரித வளர்ச்சி ஏற்படும். இச்சமயத்தில் ஆடுகளுக்கு தேவையான புரதம் மற்றும் பயறு வகைகளுடன் கூடிய புல் வகைகளை கொடுக்க வேண்டும்.

சினை ஆடுகளை மற்ற கால்நடைகளுடன் மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. மேலும் அவற்றை விரட்டி பிடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆடு வளர்ப்பில் லாபம் பெறுவது அவற்றின் உற்பத்தி திறனை பொறுத்து இருக்கிறது. எனவே, கருவுற்ற காலங்களில் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும் என, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X