தேசிய வாலிபால், சதுரங்க போட்டி பிப்.13ல் சென்னையில் தேர்வு

Added : பிப் 10, 2020
Advertisement

திண்டுக்கல்:ராஞ்சியில் அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவில் வாலிபால், செஸ் போட்டி பிப்.20 முதல் 28 வரை நடக்க உள்ளது.

இருபாலருக்கான வாலிபால் போட்டி பிப்.20 முதல் 25 வரை ஹரிவன்ஷ் தானா பகதத் உள் மைதானத்திலும், செஸ் போட்டி பிப்.20 முதல் 28 வரை தாகூர் விஸ்வநாத் ஷாஹதியோ உள் மைதானத்திலும் நடக்க உள் ளது. இதில் பங்கேற்பதற்கான மாநில தேர்வு பிப்.13 ல் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 8:00 மணிக்கு நடக்கிறது.

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழக அணிக்காக தேசிய போட்டியில் பங்கேற்கலாம். பயணப்படி, தினப்படி வழங்கப்படாது.அனைத்த துறை அரசு அலுவலர்களும் போட்டியில் பங்கு பெறலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. சீருடை பணியாளர்கள் பங்கேற்க இயலாது. பங்கேற்பாளர்கள் தங்கள் அலுவலக அட்டையுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 ல் பேசலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X