சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன்களில்வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்

Added : பிப் 10, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பல்வேறு வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் வெயில், மழையில் வீணாகி வருகின்றன.

திண்டுக்கல்லில் விபத்து, மணல் கடத்தல், போக்குவரத்து விதிமீறல், குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஏராளமான இரண்டு, மூன்று, நான்குசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் உள்ளன.

குறிப்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான இரண்டு, மூன்று, நான்கு சக்கர பறிமுதல் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. அவைகள் வெயில், மழையில் வீணாகியுள்ளன. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிகிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளது.

ஆகையால் பறிமுதல் வாகனங்களை ஏலம்விட்டால் ரூ.பல லட்சம் வருமானம் கிடைக்கும். அதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X