மாநில விளையாட்டு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம்;முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதல்வர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ஒரு லட்சம் வீதம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப் சான்றிதழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் ஒரு ஆட்ட நடுவர், நடுவர் நீதிபதி ஆகியோர்களுக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படும். விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அதன்படி, தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழகத்திற்காக இரண்டு முறை தமிழக அணியின் சார்பில் பங்கேற்று இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும்.விளையாட்டு போட்டிகளின் முன்னுரிமை வரிசையாக, ஒலிம்பிக் போட்டிகள். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள். சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள்.தெற்காசிய, தேசிய விளையாட்டு போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள் மற்றும் அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படாது.விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதல்வர், மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு வரும் 14ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X