பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் பாதிப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் பாதிப்பு

விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ரயில்வே வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என தனிப்பட்ட சலுகைகள் மற்றும் மருத்துவமனை, ரயில் பயணம் ஆகியவற்றிற்கு தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில், ரயில்வே மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வாரியத்தின் சார்பில், விழுப்புரத்தில் கடந்த 1966ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை துவங்கிய காலத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருந்தனர். அது மட்டுமின்றி, இந்த மருத்துவமனையில், எக்ஸ்ரே, இ.சி.ஜி., ஆய்வு கூடம், அறுவை சிகிச்சை அரங்குகள், மருந்து கிடங்கு, பொது கிடங்கு, பதிவறை, கட்டு கட்டும் அறை, நோயாளிகள் படுக்கை அறைகள், மகப்பேறு மருத்துவம், புறநோயாளி சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டது.
இதையாட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி கடலுார் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் விழுப்புரத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்த சூழலில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, ரயில்வே மருத்துவமனையில் இருந்த அறுவை சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது. இதற்கு காரணம், ரயில்வே துறையில் பணியாற்றும் டாக்டர்கள் பலரும், திருச்சி பொன்மலையில் உள்ள தலைமை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு சென்றுவிட்டனர்.இதன் காரணமாக விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் பணிஓய்வு பெற்று செல்லும் டாக்டர்களை அடுத்து, வேறு டாக்டர்கள் யாரும் இங்கு பணிக்கு வராததால், தொடர்ந்து இந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, இங்குள்ள பல சிகிச்சை அறைகளும் தொடர்ந்து மூடப்பட்டு வந்தது.இது போன்ற சூழலில், தற்போது விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் நான்கு டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், இந்த மருத்துவமனைக்கு, வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகின்றது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும், அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள டாக்டர்களை நியமிப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X