பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி கல்வி மாவட்டத்தில் தனி தேர்வர்களுக்கு பயிற்சி

Added : பிப் 10, 2020
Advertisement

செஞ்சி:செஞ்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது நேரடி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 5 நாட்கள் செய்முறை வகுப்புகள் நடக்கிறது.
இதுகுறித்து, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:செஞ்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் இன்று (10 தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாள் நடைபெற உள்ளது.செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் தனித்தனியாக தனித்தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7ம் தேதி வரை அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், நேரடியாக பயிற்சி மையத்திற்கு வந்து கடிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X