பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நண்பர்கள் குழு பொது மருத்துவ முகாம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
விழுப்புரம்;விழுப்புரம் லயன்ஸ் சங்கம், போக்குவரத்து காவல்துறை, போலீஸ் நண்பர்கள் குழு மற்றும் பவ்டா, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது.லயன்ஸ் சங்கத் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார், பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பேசுகையில், 'இது போன்ற மருத்துவ முகாம்களில் தான்,

விழுப்புரம்;விழுப்புரம் லயன்ஸ் சங்கம், போக்குவரத்து காவல்துறை, போலீஸ் நண்பர்கள் குழு மற்றும் பவ்டா, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது.
லயன்ஸ் சங்கத் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார், பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பேசுகையில், 'இது போன்ற மருத்துவ முகாம்களில் தான், அனைத்து வித பரிசோதனைகளையும் மக்கள் ஒரு சேர பார்த்து கொள்ள முடியும். இந்த வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் பணிகளும் சிறப்பாக இருக்கும்' என்றார்.பவ்டா தலைமை பொது மேலாளர் வெங்கடாஜலபதி, போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன், இணை ஒருங்கிணைப்பாளர் பாபு செல்வதுரை சிறப்புரையாற்றினர்.முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள், மகப்பேறு, தோல், ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பயனடைந்தனர். மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X