பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீஸ்

Added : பிப் 10, 2020
Advertisement

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போலீசார் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவலுார்பேட்டை கடைவீதியில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் கிராம மக்கள் வருகை அதிகளவில் காணப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சில முக்கிய கடைகளுக்கு எதிரே சாலையிலேயே லாரி போன்ற வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றுவதும், இறக்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல வழியின்றி நீண்ட வரிசையில் நிற்கும் அவலம் உள்ளது. அதே போன்று, கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் பைக்குகளை வரிசையாக நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். கடைக்காரர்களும் சாலையின் விளிம்பு வரை கடையை விரிவாக்கம் செய்து வைத்துள்ளனர். இதனால், கடைவீதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X