தமிழ்நாடு

'நம்ம ஊர்லயே டாக்டர் ஆகலாம்!' அரசு மருத்துவ கல்லூரி கட்டடப்பணி துவங்குகிறது

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'நம்ம ஊர்லயே டாக்டர் ஆகலாம்!' அரசு மருத்துவ கல்லூரி கட்டடப்பணி துவங்குகிறது

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரிக்கான கட்டடப்பணிகள், விரைவில் துவங்குகின்றன. பணிகளை வேகமாக முடித்து, அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த, நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

திருப்பூரில், அரசு மருத்துவக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை. மாவட்டத்துக்கு, ஒரு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைக்கப்படும் என்பது, தமிழக அரசின் கொள்கை முடிவு.மாவட்டமாக திருப்பூர் உருவாகி, 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழக அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, திருப்பூர் உட்பட ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக்கல்லுாரிகளைத் துவங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அரசு மருத்துவக் கல்லுாரி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்பட உள்ளது. மொத்தமுள்ள, 27 ஏக்கர் பரப்பில், ஏற்கனவே, 10 ஏக்கர் பரப்பில், கட்டடங்கள் உள்ளதால், மீதமுள்ள இடத்தை தேர்வு செய்து, கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.மருத்துவமனை வளாக காலியிடங்களில் உள்ள முட்புதர்கள், செடிகள் அகற்றப்பட்டு நிலப்பரப்பு சமன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டடம் அமையும் இடம், ஏற்கனவே உள்ள கட்டடங்களை ஒப்பிடும்போது, தாழ்வாக அமையும் என்பதால், அதற்கேற்ப கட்டட வரைபடம் தயாரிக்கப்பட்டும் வருகின்றன. விரைந்து கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, முடிக்கப்படவும் உள்ளது.மருத்துவ கல்வித்துறையினர் கூறுகையில், 'வரும், 2021ல், மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் வகையில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இங்கு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் என அனைத்து துறைகளும் கொண்டு வரப்படும் வகையில் கட்டடங்கள் அமைக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202007:37:39 IST Report Abuse
Bhaskaran விரைவில் தெருவுக்குரெண்டு வேலையில்லா மருத்துவர்கள் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X