சிட்னியில் கன மழை: மின்சாரம் துண்டிப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (3)
Advertisement

சிட்னி : ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் கன மழை பெய்து வருவதை அடுத்து வெள்ள நீரில் மக்கள் சிக்கி உள்ளனர்






ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயங்கரமான காட்டுத்தீ பரவியது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறியது. இச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாயின. ஆயிரக்கணககான வனவிலங்குகளும் பலியாயின. எஞ்சிய உயிரினங்கள் உணவின்றி தவித்தன.





இந்நிலையில் சிட்னியின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்ய துவங்கியது. கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு கன மழை பெய்வது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரு தினங்கள் பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
10-பிப்-202009:17:06 IST Report Abuse
vasumathi கிழக்கு கடற்கரை முழுக்க பெய்தது இன்று மழைக்கு விடுமுறை. தண்ணீர் பஞ்சம் தீர நிறைய உதவியது குறை ஒன்றும் இல்லை. புதன் முதல் இன்னும் வருகிறது. மக்கள் அனைவரும் நலமே.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-பிப்-202006:00:06 IST Report Abuse
 nicolethomson இயற்கை அதன் வேகத்தை காட்டுகையில் செயற்கையாய் உருவாக்கப்பட்ட பிரார்த்தனைகூடங்கள் கூட பல்லிளித்து விடும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-பிப்-202005:59:51 IST Report Abuse
blocked user இயற்க்கை பேரிடர் என்பதைவிட செயற்கை பேரிடர் என்றுதான் சொல்லவேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய அளவில் காடுகள் இருந்தது இன்னுமொரு காரணம். ஆங்காங்கு சருகுகளை எரிக்கிறேன் பேர்வழி என்று ஏராளமான காடுகள் நாசமாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X