சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட்டில் ஈடுபட்டவர் கைது 30 சவரன் நகைகள் மீட்பு

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 30 சவரன் நகையை மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக, நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர், புதுச்சேரி மாநிலம், வைத்திகுப்பத்தைச் சேர்ந்தபஞ்சாட்சரம் மகன் பாலுமகேந்திரன், 24; என்பதும், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, இடையன்சாவடி, பெரியமுதலியார்சாவடி உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து நகைகள் திருடியது தெரியவந்தது. உடன், பாலுமகேந்திரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 சவரன் நகையை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X