சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் போலி டாக்டர்கள் நடமாட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

நத்தம்:நத்தம் சுற்று வட்டாரத்தில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நத்தம் வட்டாரத்தில் பின்தங்கிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள பாமர மக்களிடம் மருத்துவம் படிக்காத போலி டாக்டர்கள் வைத்தியம் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓராண்டுக்கு முன்பு கோபால்பட்டி, செந்துறை பகுதிகளில் இருந்த போலி டாக்டர்கள் மற்றும் கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் இங்கு போலி டாக்டர்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது.

இந்நிலையில் நத்தம், கோட்டையூர், செந்துறை, சிறுகுடி பகுதிகளில் மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றனர். பார்மசி அல்லது நர்சிங் படித்தவர்கள் மட்டுமின்றி, அதுவும்கூட படிக்காமல் மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றியவர்கள் என பலதரப்பினரும் இவ்வகையில் உள்ளனர்.குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஓரிடத்தை தேர்வு செய்து அமர்ந்து, சுற்றுப் பகுதியில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

மருந்து, மாத்திரை வழங்கி ஊசி போடுவதும் நடப்பதாக தகவல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X