நான்கு வழிச்சாலையில்மணல் குவியலால் விபத்து

Added : பிப் 10, 2020
Advertisement
 நான்கு வழிச்சாலையில்மணல் குவியலால் விபத்து

வடமதுரை:வடமதுரையில் பல இடங்களில் நான்கு வழிச்சாலையில் தேங்கியுள்ள மண் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 2010 ல் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப் பட்டது. இந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனங்களிடம் அய்யலுார் அடுத்த பொன்னம்பலப் பட்டி சுங்கச்சாவடியில் 'உபயோகிப்பாளர் கட்டணம்' வசூலிக்கப்படுகிறது. ரோடு பணி முடிந்து வசூல் துவங்கிய காலத்தில் இருந்த பராமரிப்பு கவனம் தற்போது நிறுவனத்திடம் இல்லை. இதனால் தாமரைப்பாடி, மூனாண்டிபட்டி, மோர்பட்டி என பல இடங்களில் தார் ரோட்டில் மண் குவியல்கள் உள்ளன.

நான்கு வழிசாலை என்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. கனரக வாகனங்கள் அகலமாக இருவழி ரோட்டிலும், டூவீலரில் செல்வோர் குறுகிய பாதையிலும் பயணிக்கின்றனர். சில இடங்களில் குறுகிய பாதையில் மண்குவியல் தேங்கியிருக்கும் நிலையில், அந்த இடம் வந்ததும் மண் குவியல் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைகின்றனர். இதில் சில நேரங்களில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சுங்கச்சவாடி நிர்வாகம் ரோட்டில் தேங்கியுள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X