பொது செய்தி

தமிழ்நாடு

திருவரங்கம் பள்ளியில் மாணவர் சேர்க்கை சிறப்பு முகாம்

Added : பிப் 10, 2020
Advertisement
 திருவரங்கம் பள்ளியில் மாணவர் சேர்க்கை சிறப்பு முகாம்

திருக்கோவிலூர்:திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.
ரிஷிவந்தியம் ஒன்றியம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2020 - -21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சாதிக் ஷெரிப் தலைமையில், ஆசிரியர்கள் மாலினி, எஸ்.எம்.சி., தலைவர் மணிமொழி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தீபா மற்றும் உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பள்ளி வயது மாணவர்களை தேர்வு செய்து அடுத்த கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ப்பதற்கான சான்றிதழ் வழங்கினர்.இதன் மூலம் முதல் வகுப்பில் 19 மாணவர்களும் ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவனும் என இருபது மாணவ மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகளை அடுத்த மாதம் நடைபெற உள்ள கல்வி சீர் வழங்கும் விழாவின் போது மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X