பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்துள்ள தண்டலை ஊராட்சி கட்டடம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

Added : பிப் 10, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:தண்டலை ஊராட்சி அலுவலக கட்டடம் பல ஆண்டுகளாக பழுதடைந்து போன நிலையில் கவனிப்பாரற்று கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை ஊராட்சியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் பலமிழந்து காரைகள் பெயர்ந்து மேல் சுவர் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து உள்ளது.இங்கு இயங்கி வந்த ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓட்டு கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஆவணங்கள் வைப்பதற்கே இடமில்லாத இந்த கட்டடத்தில் மழைக்காலங்களில் ஆவணங்கள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.தற்போது சிறிய சந்தில் அமைந்துள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். அத்துடன் பழைய கட்டடத்தின் மேற்கூரையின் ஓடுகள் உடைந்த நிலையில் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள தண்டலை ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X